பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனி 105

ஆஹகுதி ஆனதற்குப் பின்

புனலில் மூழ்கிப் போனேனா?

ஆயினும் நினைவு இன்னும் தன் குமிழி குலையவில்லை சாறு பிழிந்து எறிந்த சக்கையாய், அலைகள் அலைத்த வழி நினைவு மிதக்கும்.

இன்ப அசதியில்

அச்சமய மயக்கத்தில்

மயக்கம் தந்த இருள் காட்டும் மருளில்

மண்டையுள் கண்ட வான விளிம்போரம்

ஒரு தோற்றம் அலை நடுவே படர்ந்தது,

முகம் தெரியவில்லை.

முதுகுதான் காட்டிற்று.

அதையும் அலையில் அவிழ்ந்து நனைந்து

அடையாய்க் கனத்த கூந்தல் அடைத்தது; கிண்ணம்

வழிய நிறைந்த திரவத்தின் சாயம்

கிண்ணத்தின் கண்ணாடியை மறைத்தாற் போல் முகம் லேசாய்ப் பக்க வாட்டில் திரும்பிற்று.

நெற்றியின் கோடு இறங்கி

மூக்கின் கூர்ப்பில் முனைத்து

வாயில் வழிந்து

புன்னகையின் வில்லில் வளைந்து

வலது தோள் குமிழில் ஏறிக்

கொண்டிருக்கையிலேயே உருவக் கோடு, வரைவு கலைந்து,

இருளோடு இருளாய்

அலையோடு அலையாய்க் கரைந்து விட்டது.

என்ன ஆச்சர்யம் ! இது நான் நேற்று மாலை ஆபீஸி விருந்து திரும்பி வருகையில் - அவள் உடல் ஒரு தரம் குலுங்கி நெஞ்சு விம்மிற்று.

யார் இப்படித் தன் தோளைக் குலுக்குவது ?

"முழிச்சுக் கோங் கோன்னா !”