பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனி I#9

"'என்ன, என்னிடம் சொல்லக் கூடாத ரகஸ்யமா ?” தொண்டையினின்று ஒரு தேம்பல் கிளம்பிற்று. அவன் விழிகள் கலங்கின.

'நான் ஒன்றும் அறியேன்." நாக்கு மீண்டதும் கண்டது திரும்பத் திரும்ப: "நான் ஒன்றும் அறியேன். ' "நான் ஒன்றும் அறியேன் 1’’ "நான் ஒன்றும் அறியேன் 1’’ 'எனக்கு தெரிஞ்சு போச்சு, என்னவோ மறைக்கப் பார்க்கறேள்.'

'நான் ஒன்றும் அறியேனே! ’’ 'நீங்கள் சொன்னால் நான்நம்புவேனா? நீங்கள் மறைச் சாலும் உங்களைத்தான் துக்கம் காட்டிக் கொடுத்து விட்டதே ! நான் காத்திராமல் போனேன். இருந்தால் இன்னும் கொஞ்சம் விவரம் கிட்டியிருக்கும். ஆனால் நானே எழுப்பிவிட்டேன். துரக்கத்தில் பேத்தறவாளைக் கண்டாலே எனக்குப் பயம்.”

‘'நீ என்னை எழுப்புமுன் நான் ஒரு கனவு கண்டேன். கனவு என்று கூட எப்படிச் சொல்வேன் !”

'எண்ணம் என்று சொல்லிக் கொடுக்கட்டுமா? பழைய ஏடு என்று அடி எடுத்துக் கொடுக்கட்டுமா ?”

"அவள் குரலில் சிந்திய கேலியை அவன் வாங்கிக் கொள்ளவில்லை.

'சற்று முன் நம் வெறி தணிந்த சோர்வு மயக்கத்தில் ஒரு தோற்றம் தெரிந்தது. முகம் தெரியவில்லை. முதுகு தான் காட்டிற்று. அதையும் அவிழ்ந்த கூந்தல் அடைத்துக் கொண்டது. உடனே மறைந்துவிட்டது."

'யார் அது :

器贸