பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனி 113

இதுவரை அடுப்பில் ஊதியிருக்கும் மூச்சில் ஊரையே எரித்திருக்கலாம்.

ஆனால் ஜ்வாலை எழும்பவில்லை.

தானே உள் வெந்தாள்.

-பொன்னாயி.

பொன்னம்மா.

இதென்ன மூச்சுக்கு மூச்சு எனக்கே என் பேர் உருவேற் ஹம் ? என் தஹிப்பில் என் பேர் புழுவாய் நெளியறதே ! ஐயோ, தாங்க முடியல்லியே :

-பொன்னுத் தங்கம்:

வீட்டுக்கு ஒரே பெண். செல்லப் பெண். அஞ்சு அண்ணன்மாருக்கப்புறம் அருமைப் 'பொன்னுத் தங்கை'.

-பொன்னக்கா.

அவளுக்கு முன் பிறந்தவன் வேணுமென்றே அவளை அக்காவென அழைப்பதற்கு அவள் கோபிக்கும் போதெல் லாம்:

'அம்மாவுக்கப்புறம் அப்பா உள்பட எங்கள் அத் தனை பேருக்கும் எல்லாமே நீதானே. -குழந்தை, அம்மா அக்கா, அங்கச்சி!” - -

அப்படி அவன் கெஞ்சுகையில் அவனுக்கு மூச்சு லேசாய்த் திணறும்,

கோபுவுக்கே குழந்தைபோல் தாளாத மனசுதான். அம்மா செல்லம்.

கொழு கொழுவென்றிருந்தவன், அம்மா செத்துப் போனதும், பக்கென்று ஒட்டை விழுந்தமாதிரி எப்படி வாங்கிப் போயிட்டான்! ஒரு சமயம் அரை சமயம் எச்சில் நுரையில் சிவப்பு நரம்பு தெரிந்தது.

த்வனி.8