பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவளோ 1.3%

பதவி நஷ்டப்படாமல் திரும்பவும் இங்கேயே மாத்திக்க வழி இல்லையோ?”

'ஒய், உம்மைக் குற்றாலத்து சீசனுக்கு அனுப்ப வில்லை, தெரியுமா ? சிவா, ராமா, கிருஷ்ணா வேளா வேளைக்கு அருவி ஸ்நானம், உடனே கபகப பசிக்கு சுடச்சுட, ஆவி பறக்க போத்தி ஹோட்டல் இட்டிலி, உடனே ஐந்தருவி, புலியருவி, தேனருவி, பாலருவி, சிற்றருவி, பழைய குற்றாலம், திரும்பவும் .ெ ம யி ன் ஃபால்ஸ்ன்னு ரொடேஷன்லே பாங்க் செலவிலே சுகத்தோடு புண்ணியம்னு நினைச்சுக்காதேயும்; வேலையும் செய்யனும் தெரியுமோன்னோ ? அஞ்சு வருஷமா அங்கே வண்டி நஷ்டத்திலே ஒடறதை லாபப்படுத்தணும், அதுக்குத்தான் உம்மை அனுப்பறது, தெரியுமா ? குட்பை, குட்லக், மிஸ்டர் அரவான் !”

குட் பை புரிகிறது. குட் லக் - அரவானுக்கு குட் லக் ஏது ? மோதிக்கொண்டோ முனகிக்கொண்டோ, கண்ணெ திரில் முகங்கள் வளையவந்துபுழங்கி வந்து அதுவே பழக்க மாய்ப்போன சூழ்நிலையின் திடீர் மாற்றத்தில் நம்மை நாம் காணும் புதுச் சூழ்நிலையில் மனம் மறுக்குகையில், அதையே பாசம், பிரிவு, ஏக்கம் வருத்தம், துக்கம் என ஏதேதோ ப்ெயர் அழைத்து, அதன் வி ைன வி ல் அவதியுறுகிறோம்

ஆனால் இருப்பதென்னவோ ஒரு அளவுதான். பார்க்கப் போனால் உலகமே ஒரு கைப்பிடி மண்தானே : அதுவும் எல்லோரிலும் எல்லாரும் எல்லோருக்கும் பங்காகி, வரண்டு கடைசியில், எங்கோ எட்டாம் வகுப்புப் பாடத் தில் நினைப்பு யானை விழுங்கிய விளாங்கனயாமே ! مسمب۔* உள்சதை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் எஞ்சிய முழு லொட லொட்டையை வெறும் பழக்க

த்வனி-9.