பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 லா. ச. ராமாமிருதம்

என்னைப்பார்த்ததும் எல்லோர் முகத்திலும் ஒரு வியப்பு. ராகுவா, கேதுவா, இந்த தேவ பந்தியில் இவன் எங்கு முளைத்தான் என்கிற மாதிரி.

'இந்தாங்கோ உங்களுக்கும்-'

மாட்டுக்குக் கழுநீர் வைப்பது போன்ற இந்தக்கலவை எனக்கு அறவே ஆகாது. தினமும் கலைந்த தூக்கமாத லால், தினமும் பால் வாங்குவது நான்தான்.

நானே காப்பி போட்டு இறக்கி, என் காப்பியை நானே கலந்துகொள்வேன்.

சர்க்கரை மட்டு.

பொன்னிறம்.

ஆவி பறக்க

மேல் துண்டால் தம்ளரை இரு கைகளாலும் பிடித்துத் கொண்டு...'நெருப்புக்கோழியா? ஏற்கெனவே அல்லர் கொண்டாடறேள் இப்படிக் குடித்தால் வயிறு என்னத் துக்கு ஆறது?

பரிவு தானமா? கேலியா? ஆத்திரமா?

பேசாமல், என் காப்பியை எடுத்துக் கொண்டு ஒதுக்க மாகச் சுவரோரம் குந்திட்டு உட்கார்ந்து கொண்டேன்.

ஜன்னலுக்கு வெளியே வாழைக்குலை, காலை வெயிலில் பளிச்

குலை நுனியில் பூண்போல் பூ இன்னும் மடல் அவிழ வில்லை.

அட, இதுவரை எப்படி என் கண்ணில் படவில்லை.

ஆமா-பட்டதால் என்ன லாபம்? நட்டது நான் தான். வளர்த்தது நாங்கள்தான். ஆனால்,

(ஏன் ஸார், வீடு யாருது? இடம் யாருது? கன்னை நான் வைக்கச் சொன்னேனா, பூச்சிப் பொட்டுக்கு இடம்