பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏堡剑 லா. ச. ராமாமிருதம்

'இது தனி ஜாதி, சாமி. நீங்களே பார்க்கப் போlங்க. ஏறக்குறைய தென்னைமரம் ஒசரம், தடுமனுக்கு வளரும். குலையில் காய் ஒன்னு கைமுழம் அடங்காது.

தாவர விஷயங்களில், சின்னான் பேச்சுக்கு எதிர் பேச்சு கிடையாது. அவன் சொல்லுக்கே அவை பயப்படும் என்று ஒரு வழக்கு. அவ்வளவு அனுபவம்; அவ்வளவு, பலிதம்.

உதவாத பிள்ளைமேல் ஆசையும் ஜாஸ்தி.

சென்னையின் நெருக்கடி வாசத்தில், ஒரு நடுத்தரக் குடும்ப வசதியில் (அது என்ன வசதியோ? ஒவ்வொன்றாய். இழந்து கொண்டே எல்லாவற்றையும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பதாய் நினைப்பு) வீ ட் டு ள், கண்ணுக்குக் குளிர்ச்சியாய், இலைப்பச்சையின் தரிசனம் கிடைப்பதே பேறு இல்லையா? இதுவே சிரமத்துக்குப் பரிசு என்று ஏன் சமாதானம் ஆகக் கூடாதா ? ஆறுதலுக்குத்தான் வழியில், நாட்டில், உற்ற பழமொழி களுக்குத்தான் குறைவா ?

சீச்சி இந்தப் பழம் புளிக்கும். கிட்டதாயின் வெட்டன மற. மனம் உண்டானால் இடம் உண்டு. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? திருடன் ராஜ முழி முழிக்கற மாதிரி. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. யானைக்கு ஒரு காலம், பூனைக்கொரு காலம்.

r്.

-மூக்கு விளிம்பில் பட்டுப் பொத்தென்று ஏதோ கீழேவிழுந்தது.

ஹிந்து ஞாயிறு அனுபந்தம். ஒ; லாரி 1 ஒ! ஞாயிறு அன்று மரியாதைக்கும் அம்பேல் தானா?