பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் ? 14%

கிடையாதா? ப்ரும்மத்துக்குச் சும் மா வே இருக்க முடியாதா ?”

எனக்குக் கால்கட்டை விரலிலிருந்து ரத்தம், நரம்பு களில் பாய்போல் சுருட்டிக்கொண்டு மேல் ஏறி வருவது தெரிகிறது. செவிகளில் ஆவி பறக்கிறது. கண்ணை இருட்டுகிறது. -

நரசிம்மனின் அவஸ்தை புதிதா ? புத்தன், ராமன், மார்க்கண்டேயன், ஏன் இவர்களுக்கும் தொன்றுதொட்ட காலத்திலிருந்து வெவ்வேறு விதங்களில் மனிதனை ஆட்டி வைத்துக்கொண்டிருக்கும் இந்தக் கேள்வி இந்த ரூபத்தில் நரசிம்மனுக்கு வந்திருக்கிறது. அது ஒருவாையும் விடுவ தில்லை. சிருஷ்டி மனிதனுக்குத் தந்திருக்கும் புத்தி எனும் ஆயுதம். அவனையறுத்து அவன் பிறனை அறுத்து கூர், கூர், கூராகிக் கொண்டே போகும் தேய்வின் வதையிது. நரசிம்மன் வியாதிக்கு மருந்து தேடவில்லை, உடலி ருப்பதால்தானே வியாதிக்கு இடம், உடலேயில்லாம விருக்க வழி கேட்கிறார். பிரளய நிலை.

"இந்த நிலையிலிருந்து விமோசனமே கிடையாதா ?” விமோசனம், விடுதலை - ஹ7ம் உண்மையில் எவ்வளவு வியர்த்தமான வார்த்தைகள்! நெஞ்சில் நிரவ லுக்கு என்ன பகட்டான போர்வை!

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் கண்டவர் விள்ள இயலாதவரை, காணாதவருக்குக் கண்டவரும் காணாதவரும் ஒன்றே.

"சொல்லுங்களேன்!” நரசிம்மனின் முகம் சிவத்து. விட்டது.

'ஏதேனும் சொல்லுங்களேன்! இல்லை, எனக்குப் பதிலே கிடைக்காதா?’’