பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 லா.ச. ராமாமிருதம்:

"கொளந்தைகளா ?” அவள் கணிரென்று சிரித்தாள் 'கடவுள் எண்ணம் வெக்கலிங்க. ஆனால் நாங்கள் அதைப் பத்திக் கவலைப்படல்லிங்க. இவர்தான் எனக் குக் கொளந்தை. நான்தான் அவருக்குக் கொளந்தை, எழுந்துாட்டீங்களா? நேரமும் ஆவுது சரி, போய் வாங்க...?”

கையும் பிடியுமாய் அகப்பட்டும், மன்னிக்கப்பட்ட திருடன் போல் நான் அவ்விடம் விட்டு அகனறேன்.

சோதிப்பவன்தான் உண்மையில் சோதி க் க ப்

படுபவனும்.

玄 இவளை எங்கோ பார்த்த மாதிரி நினைவில் ஏதோ இடறுகிறது. ஆனால் நிச்சயமாய் இவளை நான்

இதற்கு முன் பார்த்ததில்லை. பார்த்திருக்கவே முடியாது. இவர்கள் மூவர் மேலும் புரியாத சோகச்சாயை படர்ந்திருக்கிறது. இவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ நல்ல கவிதையைப் படித்தபின் நெஞ்சில் அதன் வண்டலாய்த் தங்கும் கிலேசம் இறங்குகிறது. குளிர் தாங்காது ஒன்றுடன் ஒன்று ஒடுங்கிக்கொள்ளும் சிட்டுக் குருவி ஜோடியை நினைவூட்டுகின்றனர்.

இவள் எவ்வளவு சிறுகூடாய் இருக்கின்றாள்! இவ் வளவு குறுகிய வயிறு எப்படிச் சேகரின் கருவைத் தன் னில் அடக்கிச் சுமந்தது?

-இது எவ்வளவு முட்டாள்தனமான கேள்வி சுமந்து தானே சேகர் உருவாகி வெளிவந்து பம்பரம் விளை யாடுகிறான். தவிர இது என் கவலையா ? இது எண்ணத் தின் அக்கப்போரன்றி வேறு என்ன ?

அவர்கள் வீட்டில் செய்யும் பலகாரங்கள்--ஏன் சில: சமயங்கள் அவள் கணவன் வாங்கி வரும் பொட்டலங் களில் கூடப் பங்கு பையன் மூலம் வரும்.

மறுக்கவும் முடியவில்லை. ஒரு தடவை திருப்பியனுப் பியதற்கு அவளே நேரே வந்து விட்டாள்.