பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரிகள் 盛母

யேனும் எதிராளியைச் சந்தோஷப்படுத்துவது முக்கியம். The customet is always right—3)g aro Guàràujdo, gray உததியோகத்தின் நெற்றிப்பட்டை- மேஜைமேல் நகைப் பெட்டியை அவன் பக்கம் நகர்த்தினேன்.

"இந்தாங்க தேவரே சரிபார்த்து எடுத்துக்கோங்க!”, 'கையில் எடுத்துக் கொடுங்க சாமி!'

ஒஹோ கரடி மயிர் போன்று தழைத்து என் விழி களை மறைக்கும் புருவங்களின் வெள்ளைக்கு இவன் செலுத்தும் காணிக்கையாக்கும்!

இவ்வெள்ளைப் பு ரு வங் க ளி ன் விளைவுகள் வெவ்வேறு.

என் பிள்ளைகளுக்கு அப்பாவோடு தெருவில் நடக்க வெட்கம். (அப்பாவா தாத்தாவா?)

புருவத்துக்கு லேசாய் மை தடவறேனே! என்னைப் பக்கத்தாத்துலே கேக்கறா ‘ஏண்டி ஹேமா, நீ மாமாவுக்கு இளையாளா, மூனாம் தாரமா ?”

‘சாமிக்கு வயசு எழுபது கிட்ட இருக்குமா?

'ஏன் உமக்கு என்ன ஆகிறது?’’

வர ஆணிக்கு அறுவது முடியலாமா வேணாமான்னு

பார்க்குங்க. '

ஒய், உம்மைவிட நான் இப்பவே ஐந்து வயது சின்னவன் தான்!” என்று பதில் சொல்லி அவன் மூக்கை உடைத்து என் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முடியுமா? மூச்! ஆள் இரண்டு வருடத் தவணையில் ரூ. 25,000 போட்டிருக்கிறான்.

'ஹி! ஹி!! ஹறி!!!’

அசட்டுச் சிரிப்புச் சிரித்து சமாளித்துக்கொள்ள வேண்டியதுதான்.

த்வனி-4