பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியூகம் 73

திடீரென்று அப்பா காலை வாரிவிட்ட, இந்தச் சாவு அவன் மனதில் கிளறியது என்ன? அவருடைய பிரிவின் துயரமா, அல்லது அவரைப் பிணமாய்க் காணும் பயமா? இப்பொழுது அவரை-இல்லை. அதைத் தொடக்கூடக் கை கூசுகிறது. ஆனால் அம்மா அதன்மேல் விழுந்து புரண்டு அழுகிறாள். அம்மாவை இம்மாதிரி அவன் கண்டதில்லை. கண்டது சஹிக்கவில்லை.

அம்மா அப்பா! அப்பா!! என்று கதறுகிறாள். அம்மாவும் அப்பாவும் அந்தரங்கமாயிருக்கையில் ஒருவரை யொருவர் எப்படி அழைத்துக் கொள்வார்களோ? ஆயினும் இப்பொழுது, அம்மா, பிள்ளைக்கெதிரில் அழுகையில், அவள் மனம் குறிக்கும் உறவு வேறாயினும்: வாய் அதை வெளிவிட்டுச் சொல்ல முடியாமல் அப்பா அப்பா!, என்றே அலறித் தவிக்கிறது.

'அப்பா! அப்பா”

குடும்பத்துக்கு அவன்தான் இனிமேல் தலைவன் கலியாணத்திற்கு இரண்டு தங்கைகள். கழுத்துக்கு மேல் கடன் பொறுப்புகளுக்கு அடிமையாகி விடுதல்தான் தலைமை போலும்!

உண்மைதான், அழகு என்கிறார்களே, அப்படியாயின் இதுதான் அழகா? இது அழகு இன்மையால், இது உண்மையில்லையா? சாவும் உண்மையில்லை; பின் எது தான் ஊன்றுகோல்? அல்லது ஊன்றுகோலே யில்லையா? ஒருவிதமான பிடிப்பும், அர்த்தமுமற்று, கூட்டுள் அ ைட ப ட் டா ற் போ ல், சுற்றிச் சுற்றி, சுற்றிய இடத்தையே சுற்றிக்கொண்டு, சுயநினைவுடனேயும் இருப்பது எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது. அல்லது மறதிதான் உண்மையா ? நடந்ததையெல்லாம் மறந்து விடுவதுதான் சாத்திய மில்லாவிடிலும், மரத்துப் போவதாவது சாத்தியமா ?

கொள்கை முறையிலும், தொன்று தொட்ட வழக்க

முறையில் அவன் பாவிக்கும்படி அவன் உள்ள்ே ஊறியும்