பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. லா. ச. ராமாமிருதம்

சட்டையோடு கழன்று கோட் ஸ்டாண்டி'ல் தொங்கிக் கொண்டிருக்கிறதா? இருக்காது. நேற்று நான் சட்டை யோடு படுக்கவில்லையே! ஆ! புரிந்தது. நேற்று அம்மா வைப் பொசுக்கிவிட்டுக் காட்டிலிருந்து வந்து குளத்தில் மூழ்கிய போது ஜலத்தில் நழுவியிருக்கும்; வேறு வழியே இல்லை. -

பூனூல் போன வழி புரிந்ததுமே கூடவே நெஞ்சில் ஏதேதோ கதவுகள் திறந்துகொண்டே போயின

வெடுக்கென நான் எழுந்த வேகத்தில் மடியிலிருந்த பணம் தரையில் சிந்திற்று. சில்லறைக்குத்தான் எத்தனை இரைச்சல்!. -

சாஸ்திரிகளே, நான் சடங்குகளைச் செய்யப் போவதில்லை."

வாத்தியாருக்கு வாய் தொங்கிற்று. ஏன் திடீர்னு இப்போ என்ன?...'

சரஸ்திரிகளே, திடீர் என்று நேர்பவைகள் தாம் திடம், நிஜம். படிப்படியாய் நேர்வது மாறுதல், பல காலம் முடிச்சவிழ்ப்பு நிச்சயமில்லை. திடீரென்று நேர் வதுதான் சிக்கறுப்பு. விடுதலை, மீட்சியற்றது. விடுதலை திடீரென்று தான் நேரமுடியும்.'

'இப்போ என்ன விடுதலை, எதிலிருந்து விடுதலை?” 'நூல் கட்டிலிருந்து விடுதலை, இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என மாறி மாறிக் காட்டும் நம்பிக்கையின் போதையினின்று உதறிக்கொண்ட தெளிவு."

'எனக்கு ஒன்றுமே புரியவில்லை." 'உங்களுக்கு விளக்குமளவிற்கு என்னுள் இப்போது நேர்ந்ததற்கு இன்னும் வார்த்தைகள் வரவில்லை. ஆனால் வரும், ஒரு நாள் வரும். ஆனால் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? நேர்ந்தது நேர்ந்து விட்டது. விடுதலையின் பாதையே அந்தச் செயல்தான்.”