பக்கம்:நக்கீரர்.djvu/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3

நக்கீரர்.

கூறுதல் காண்க. இவர் தந்தை *கணக்காயரென்பது இவர்க்கு வழங்கும் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்னும் பெயரானும், இவர் மகனார் +கீரங்கொற்றனார் என்பது களவியலுரையானும் அறியப்படுவன. கணக்காயர் என்னுஞ் சொற்குப் பிள்ளைகளைக் கூட்டமாகர் சேர்த்து வைத்து, அரிச்சுவடி என வழங்கும் தமிழ்க் கணக்குப் பயிற்றுவிப்பவர் என்று ஒரு சாரார் பொருள் கூறுப. தமிழெழுத்துக்களின் றொகுதிக்குத் தமிழ்க்கணக்கு, தமிழ் நெடுங்கணக்கு எனப் பெயருளவாயினும், ஈண்டு அதுவே பொருளெனக்கொள்ளுமாறில்லை. தமிழ்ப் பழ நூல்களையெல்லாம் கீழ்க்கணக்கு மேற்கணக்கெனப் பகுத்திலக் கணங் கூறலானும், 'கணக்கினை கற்றலிற் கேட்டலே நன்று' என வழக்காறுண்மையானும், கணக்கென்பது நூல் என்னும் பொருட்டாதல் பெறப்படும். நூல்களெல்லாம் ஒவ்வோரளவினலாக இயன்றமையின் கணக்கென வழங்கப்பட்டனபோலும்? சமயக்கணக்கர் என்புழியும் கணக்கு இப்பொருட்டாதல்வேண்டும். 'எழுத்துமெண்ணுங் கணக்கென்றாகும்' என்று பிங்கலத்தில் எண்ணுடன் வைத்தோதிய எழுத்து இலக்கணமென்னும் பொருளதாகுமெனல் அமைவுடைத்தேயாகலின் இலக்கணமும் கணக்கெனப்படுமென்க. இனி, 'கணக்காய ரோத்துரைப்போர்', 'கணக்காயர் நாலுரைப்போர்' என்று நிகண்டுகள் கூறுவதும், 'கணக்காயர்' என்று கீழ்க்கணக்குக்கள் கூறுவதும், கணக்காயராவார் தொல்கேள்வித் துறை போகிய நல்லாசிரியன்மா ரென்பதனை நன்கு விளக்குவன

____________________________________________________________________________

  • குறுந்தொகையில் ஓர் பாட்டு 'கணக்காயன் றத்தன்' பாடியது என்றிருப்பது கொண்டு இவரது இயற்பெயர் தத்தன் என்று சிலர் கருதுகின்றனர்.

+கீரங்கொற்றனார் என்பது எழுதுவோராற் றிரிபுற்றது போலும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நக்கீரர்.djvu/10&oldid=1093867" இலிருந்து மீள்விக்கப்பட்டது