பக்கம்:நக்கீரர்.djvu/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4

நக்கீரர்.

வாகும். மதுரைக் கணக்காயனார் பாடிய பாட்டுக்கள் தொகைநூல் பலவற்றிற் காணப்படுதலே யவரது புலமைக்குத் தக்க சான்றாகும்+. இவ்வாறாகலின் 'மகனறிவு தந்தையறிவு', 'மகனுரைக்கும் தந்தை நலத்தை' என்ற முதுமொழிகளின்படி நக்கீரரது அறிவு மாட்சிக்கு அவரது பிறப்புங் காரணமாய் நின்றமை காண்க.

குலம்.

இனி, இவர் குலத்தைப்பற்றியும் பலர் பலவாறு கூறிநிற்பர். 'கொங்குதேர்வாழ்க்கை' என்னுஞ் செய்யுட் பொருள்பற்றிச் சொக்கநாதர்க்கும் நக்கீரனார்க்கும் வாது நிகழ்வுழி,

'அங்கங் குலுங்க வரிவாளி னெய்தடவிப் பக்கம் படவிரண்டு கால்பரப்பிச் - சங்கதனைக் கீர்கீ ரெனவறுக்குங் கீர்னோ வென்கவியை யாராயு முள்ளத் தவன்.'

என்று சொக்கர் வெகுண்டு கூறாநிற்ப, அதற்கெதிராக நக்கீரரும்,

'சங்கறுப்ப தெங்கள்குலந் தம்பிராற் கேதுகுலம் பங்கமறச் சொன்னாற் பழுதாமே - சங்கை யரிந்துண்டு வாழ்து மானாரைப் போல விரந்துண்டு வாழ்வ தில்லை.'

என இறைவரைப் பழித்துரைத்தனர்; என்று ஓர் கதை வழங்குகிறது. இதற்கு ஆதாரமாகக் காணப்படுவது பழைய திருவிளையாடலிலுள்ள, ____________________________________________________________________________ +சிறந்த புலவராயினார் நெடுங்கணக்குக் கற்பித்தல் கூடாதென்பது எம்கருத்தன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நக்கீரர்.djvu/11&oldid=1093885" இலிருந்து மீள்விக்கப்பட்டது