பக்கம்:நக்கீரர்.djvu/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நக்கீரர். வாகை', ' அடுபொருநன் ' என்பன போல வெளிப்படை யாகும். பொற்கொல்லராதிய கம்மாளர்கள் தம்மை ‘ விசுவப் பிராமணர் ' எனக் கூறிக்கொள்வதற்கு ஆதாரம் இருத்தல் வேண்டும். அகப்பாட்டுரைகாரர் 'ஊர்ப் பார்ப்பான்' எனக்கூறுவதும் இக்கருத்துப்பற்றியேபோ லும்? விசுவப்பிராமணன் எனினும் ஊர்ப்பார்ப்பான் எனினும் ஒக்கும். விசுவம் == உலகம். உலகம் என்னுஞ் சொல் நிலத்தின் ஒவ்வொரு பகுதியையும் குறித்தல் இருவகை வழக்கினும் காணப்படுகிறது. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நிலப்பகுதிகளை, காடுறையுலகம், மைவரையுலகம், தீம்புன லுலகம், பெரு மணலுலகம் எனத் தொல்காப்பியர் கூறுதல் காண்க. அது மற்றும் சுருங்கி 'ஊர்' என்னும் பொருளில் வரு தலை, ஊர்வாயிலை 'உலக விடைகழி ' யென்றும், ஊரம் பலத்தை 'உலகவறவி' யென்றும் முறையே சிலப்பதி காரமும், மணிமேகலையுங் கூறுதல் கண்டு தெளிக. வேளாப்பார்ப்பான் என்றது வாளரத்திற்கு அடை. வளைகளை தற்குக் கொள்ளினும் இழுக்கின்று. இங்குக் கூறியவாற்றால் நக்கீரர் பார்ப்பாராவர் என்பதற்குப் பிர மாணமின்மை காண்க. அவர் அந்தணராகார் என்பது எம் கருத்தன்று. இன்ன மரபின ரவரெனத் துணிதற் குத் தக்க மேற்கோள் எமக்கி துகாறுங் கிடைத்திலது. வேண்டிடின் யாம் அவரை, விருந்து போற்றிய வேளாள ரென்றும், அகப்பொருள் விரித்த புகழ்ப்பெரு வணிக ரென்றும், புவியாசேத்து கவியா சென்றும், செந்தண்மை பூண்ட அந்தணரென்றும், பிறபிறவாறும் பாராட்டுதல் பொருந்துவதாகும். -*சீர்கருணீகர் புராணம் என்பதொன்று நக்கீரரியற்றிய தென்றும் அதனால் அவர் வேளாளரில் கருணீகர் அல்லது கணக் கர் வகுப்பினரெனக் கருதப்படுகிறதென்றும் கூறுவாரும் உளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நக்கீரர்.djvu/14&oldid=1284212" இலிருந்து மீள்விக்கப்பட்டது