பக்கம்:நக்கீரர்.djvu/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை.

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்று - மாங்கவற்றுண் மின்னோர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்.

அமிழ்தினு மினிய நம்தமிழ் மொழியினை முச்சங்க நாளினும், பிற்றை நாளினும் ஆராய்ந்து, நல்லறிவின் முற்றுப் பேறுடையராய் விளங்கிய புலவர் பல்லாயிரவராவர். அன்னவரியற்றய நூல்களும், பாட்டுக்களும் துறைதொறும் எண்ணில்வாகும். அவற்றுட் பல காலவயத்தானே மறைத் தொழிந்தமையின், அவற்றை யியற்றிய புலவர் பெயருள்ளும் பல மறைவனவாயின. எனினூம், சிற்சில ஆண்டுகளாகச் சில பெரியோர்களின் அரிய முயற்சியால் தமிழ்ப் பழநூல்களுள் எஞ்சியுள்ளன வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. அவைகளிலிருந்து பன்னூறு புலவர்களின் பெயரை அறிகின்றோம். அவைகளை வெளிப்படுத்திவரும் பெருந்தகையாளர்கள்பால் தமிழ் மக்கள் அனைவரும் நன்றி பாராட்டக் கடன்பட்டோராவர்.

வெளிவந்த நூல்களுட் சிலவே தமிழின் பழமை, பெருமைகளை விளக்குதற்குப் போதியவாகும். அங்ஙனமாகவும், பிறமொழியாளர்கள், அவ்வம் மொழியிற் புலவராயிருந்தாரின் சரிதங்களையும், அவர்களியற்றிய நூற்பொருணுட்பங்களையும் ஆராய்ந்து விரித்தெழுதி மாணவர்கள் கற்கும்படி செய்வதுபோல், தமிழ் மக்கள் செய்திலர். சில சிறந்த புலவர்களைப்பற்றித் தம்மனம் போனபடி சிலர் புனைந்துவிட்டனர். தமிழ்ப் புலவர் பலரையும்பற்றி ஆராய்ந்து தொகுத்தெழுதிய புத்தகங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நக்கீரர்.djvu/6&oldid=1092714" இலிருந்து மீள்விக்கப்பட்டது