பக்கம்:நக்கீரர்.djvu/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2

நக்கீரர்.

உரையாணியாய் நிற்பதொன் றென்னலாம். இன்னணம் பல்லாற்றானும் புகழ்மிகப் படைத்த இவ்வாசிரியர் வரலாற்றினை யாம் அறிந்து கோடற்குக் கருவியாயிருப்பன இவரியற்றிய நூல், உரைகளும், திருவிளையாடல் முதலிய புராணங்களும், பிறவுமாம்.

பெயர்க்காரணம்.

இவரது இயற்பெயர் கீரன் என்பது. இப்பெயரின் பொருள் அக்காலத்து வழங்கிய எனைப்பல பெயர்ப் பொருளுமொப்பவே யின்னதெனத் துணிந்திடற்கரியதாகவுள்ளது. பாலப்பன் என்பது இவரது பிள்ளைத் திருநாமம் என்றும், இவர் புலமை நிரம்பியோராய்த் தமிழ்ச் சங்கமடைந்தபின்னர் முற்பெயரின் பொருளுக்கேற்பவே, 'கீரன்' என அழைக்கப்பட்டனரென்றும் ஒரு சாரார் கூறுவர். கீரன் என்பது 'வாக்மி' எனப் பொருள்படுவதோர் வடசொற் சிதைவென்று பிறிதொருசாரார் கூறுவர். பிறர் பிறவாறுங்கூறுப. இதன் பொருள் யாதானும் ஆக. கீரந்தை, கீரங்கண்ணன், கீரங்கீரன் எனத் தமிழ்ச் செய்கை முடிபுற்றடிப்பட்டு வழங்குஞ் சொற்களையெல்லாம் தக்க ஆதாரமின்றியே வடசொல்லெனக் கூறிவிடுதல் கருத்தன்றாம். இவர் கலையெலாம் நிரம்பிக், கூரியவறிவும், சீரியவொழுக்கமு முடையராய் விளங்கிய போழ்து இவரது சிறப்புநோக்கி நகரவிடைச்சொல்லும், 'ஆர்' விகுதியும் தந்து நக்கீரனார் என அறிஞரெல்லாம் வழங்குவாராயினர். 'குலநினையல் நம்பி' என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுரையில், 'நப்பின்னை'யென்பதனை விளக்குழி 'நப்பின்னை-அவள் பெயர். ந-சிறப்புப் பொருளுணர்த்துவதோ ரிடைச்சொல்; நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற்போல' என நச்சினார்க்கினியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நக்கீரர்.djvu/9&oldid=1093831" இலிருந்து மீள்விக்கப்பட்டது