பக்கம்:நச்சுக் கோப்பை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நச்சுக்கோப்பை பாய்ந்துவிட்டன. இதை நான் சொல்லவில்லை.சாந்தா வின் வார்த்தையை உம்மிடம் சொல்லுகிறேன்,அப்பா! மணி : பழனி! என்ன வாழ்வு - புடலங்காய்! வர்ணிக்க ஆரம்பித்து விட்டாயே. சாந்தாவை இப்பொழுது கிணற் றிலா தள்ளப் போகிறேன்? ug : கிணற்றில் மட்டும் தள்ளவில்லை அப்பா. அவள் தலையில் கல்லையும் தூக்கிப் போடப் போகிறீர்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். சாந்தாவுக்குப் பிடித்த மணவாளனுக்கே மாலை சூடச் சொல்லுங்கள். மணி : ஏய் பழனி! யாரிடம் இந்த வார்த்தை பேசு கிறாய்! காதலாம்! அன்பாம்! வாழ்வாம்!ஏகாம்பரத்தைப் பற்றி எனக்கு அப்பொழுதே தெரியுமே. அவர்கள் பார்த் துக்கொண்ட பார்வையும், ஜாடையும் தெரிந்து தானடா கலியாணத்திற்கு இவ்வளவு துரிதப்படுத்தினேன். கேவலம், ஒரு வெற்றிலை பாக்குக் கடைக்காரனுக்கா என் மகளைக் கொடுப்பேன்? அதிலும் ஏழ்மையிலே கெளியும் ஏகாம்பரமா சாந்தாவுக்குக் கணவன்? உண்மையிலேயே உனக்கு பயித்தியம்தானடா பிடித்திருக்கிறது. பழ: அப்பா! காதல் ஏழ்மையை எண்ணிப் பார்ப் பதா? எதிர்ப்புக்கு அஞ்சுவதா? அன்பிற்கு மாத்திரம் தானே அது அடிமை! மணி : மறுபடியும் அதையே பேசுகிறாயே. உனக்குச் சம்மதம் இல்லையானால் நானாவது வீட்டை விட்டுப் போகி றேன். நீயாவது ஆட்சியை நடத்துபோ. பழ: கருங்கல்லைக் கரைக்க முடியுமா? கட்டாந்தரை யில் பயிரிட முடியுமா? கண்ணில்லாதவனுக்கு மண் 8