பக்கம்:நச்சுக் கோப்பை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நச்சுக்கோப்பை மனம் குழம்புகிறது) தளபதி! தற்கொலை வின் படத்தைப் பார்க்கிறான். அண்ணா!திராவிடத் கொள்வது கோழையின் செயல் செய்து, என்கிறீர்களா? வீர னுக்கு அழகா என்கிறீர்களா? செயலாற்ற முடியாத கோழையே என்கிறீர்களா? ஆம். அன்று முதல் நான் ஒரு சீர்திருத்தக்காரன், இன்று முதல் சாந்தா ஒரு சீர்திருத்தக் காரி. என்றும் ஏகாம்பரன் ஒரு சீர்திருத்தக்காரன். இந்த மூன்று சீர்திருத்தக்காரர்களும் மதத் திமிர் பிடித்த மடையர்களுக்கு அடங்கித்தான் கடக்க வேண்டுமா? பணமும் பதவியும் என்ன செய்ய முடி யும்? உணர்வை ஒழிக்க முடியுமா? அல்லது தங்களுடைய கொள்கையைக் கொளுத்த முடியுமா? முடியாது. ஏ பணமே! மதமே! பார்க்கிறோம் உங்களை ஒருகை. (நச்சுக் கோப்பையைக் கீழே வீசி உடைக்கிறான்) (கருப்பன் வருகை) கரு: டேய், யாருடா சத்தம் போடறது? பழனி: யாரப்பா நீ? கரு: நீ யாருன்னு கேட்டா, என்னையே திருப்பிக் கேக்கறே. டேய்,சங்கத்திலே உனக்கு என்னடா வேலை? சங்கம், கிங்கம் னு பேசுனியே உன்னைப் பங்கப் படுத்திடு வேன். இந்தச் சிங்கத்தைத் தெரியுமாடா? பழனி: ஏய்,மரியாதையாக வெளியே போகமாட்டாய். கரு : டேய் தம்பி, உன்னை வெரட்ட வந்திருக் கேன்டா நான். என்னவோ சொல்வாங்களே ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஓட்டுவேன் என்றதாம். பழனி: போடா குடிகாரப்பயலே. கரு : டேய். என்னையா குடிகாரங்கிரே! நீயா? நானாடா? 54