பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. நடந்துகொண்டே இரு!

தேசத்தில் முளைக்கின்ற ஆர்ப்பாட் டங்கள்! தீச்செயல்கள், வன்முறைகள் எல்லாம் சூழ்ந்தே மாசனுகா இளமனத்தில் விஷத்தை தூவி மயங்குகின்றார் குழம்புகின்றார் மாணவர்கள்.

இதற்கெல்லாம் பொறுப்புள்ள குற்றவாளி யார் என்றால் நாமேதான்! நம்மைத் தானே, அதற்கென்றும் இதற்கென்றும் மாணவர்கள் அடியொற்றி நகலெடுத்து வருகின்றார்கள்? முன்னோடும் தலைவர்களாம் நாமும் நல்ல முறையோடும் தெளிவோடும் நடந்து கொண்டால்பின்னோடி வருகின்ற மாண வர்க்கு பிரத்தியட்ச யதார்த்தமாம் உணர்வு பொங்கும். ‘சுதந்திரத்தைப் பெறுவதற்கு வன்முறையைச் சூறாவளிக் கிளர்ச்சிகளைத் தவிர்ப்பீர்!’ என்றே இதமொழிகள் நமக்குரைத்தான் காந்தி தேவன்! இன்றுநம் மாணவர்க்கும் இதுவே சொல்வேன்.' பெற்றமிகு விற்பன்னர் ராதாகிருஷ்ணப் பெருந்தகையின் சொல்லமுதப் பிழிவே இதுவாம்! நெற்றிந ரம்புப்பு டைக்கச் சிந்தை குன்றி நிலைகுலையும் போக்காளர் கவனிக்கட்டும்!