பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம் 16 பதவிகளோ தகுதிகளோ ஒழுங்கு செல்லும் பாதையினை அடைப்பதற்கு தடைக்கல் அல்ல! சுதந்திரமே ஒழுங்கினிற்றே பிறப்ப தாகும்! தாயமனம் பக்குவத்தால் கட்டுப் பாட்டால் இதமான நம்பிக்கை ஊற்றெடுக்கும்! எனக்கென்னும் உனக்கென்னும் போக்கைவிட்டுச் சகவிகிதம் சமூகத்தில் ஒழுங்கை ஏற்றால் சமுதாயம், தனிமனிதன் வளங்கள் பெருகும்.!

ஏதேனும் சர்ச்சையிலே சிம்மா சனத்தில் இருக்கின்ற அரசன்தான், கீழுள்ளோனை யாதாயினும் தீர்ப்பளிக்க பணித்தான் என்றால் அவன் எடுத்துக் கூறுகின்ற நல்ல தீர்ப்பைப் பேதமின்றி ஏற்பதுதான் நியாய மாகும்! பிறிதொன்று இதுவன்றி ஒழுங்கு இல்லை! நீதிக்கு நிறம் தரமோ ஏற்ற இறக்க நிலைமைகளோ சிறிதேனும் இருத்தல் இல்லை!