பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

நடந்து கொண்டே இரு!

பள்ளம் கண்டும் பாயா வெள்ளம் பாரில் உண்டா? பார்த்த துண்டா?
உள்ளம் மின்னினால் கோடி உலகம் உனது பின்னே ஓடி வருமடா! நடந்து கொண்டே இரு வழியை கடந்து கொண்டே இரு!

கொஞ்சும் தென்றலே சூறை யாயினும் கூவும் குயிலே கூகையாய் அலறினும் பஞ்சிடம் சிறகுகளை இரவலாய்ப் பெற்றே பாதை நீளினும்; பயணம் நீளிலும் நடந்து கொண்டே இரு! தடைகளைக் கடந்து கொண்டே இரு!

நெருப்புப் பாலையின் இருப்பை மிதித்தும் நெட்டைக் காட்டின் விரல்களை நசுக்கியும் கருப்பு இரவுகள், வெள்ளைப் பகல்கள் கலந்த நிமிட நேரங்கள் அனைத்தும் நடந்து கொண்டே இரு! பயணம் தொடர்ந்து கொண்டே இரு!

ஒருநாள் அந்த உதய சூரியன் ஒளிமுகம் காட்டும் துளிவினாடிக்கு திருநாளாய் உனது தேனின் தேதி தெரியும் வரைக்கும் மானுடப்புயலாய் இ நடந்து கொண்டே இரு! மகனே, நடந்து கொண்டே இரு!