பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35 நடந்து கொண்டே இரு

ஆதிமுதல் இத்தேதி ஈறாக எந்த அரசாலும் தங்கமது விழ்ந்ததுவே இல்லை! சாதி இன மதமொழிகள் பண்பாடு எல்லாம் தங்கத்தின் இளிப்புக்கே இண்றுவரை அடிமை! நீதிஎனும் தேவதையும் சிலவேளை தங்க நிழலுக்குள் புகுவதாலே உருமாறல் உண் டே! மேதினியின் பரப்பனைத்தும் சமதர்மம் உழுதே மேடுபள்ளம் நிலவும்வரை தங்கந்தான் வெல்லும்! மக்களுக்கு மக்களாலே இயங்குகின்ற அரசாம் மாண்புவளர் குடியரசு ஆள்கையதும் இன்று தக்கஎழில் வலுவுற்றே ஆரோக்கியம் காணத் தங்கந்தான சத்துமிகு மாத்திரையாய் ஆகும்! 'விக்குகின்ற நிதிக்குறைகள்' அரசதற்கே நேரே - 'வீங்குகின்ற பணநோயால் விலைவாசி ஏற எக்களிக்கும் பணமுதலைக் குடலுக்குள் ஓடி இரகசியமாய்த் துயில்பொன்னே காரணமாய் ஆகும்!