பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

நடந்து காெண்டே இரு!



சிவப்புத் தேதி


அன்றுதான் இந்த நாட்டார்
அசமந்தத் துயிலை நீக்கி
தின்றிடும் உணவில், ஆசை
தேக்கிடும் உடையில், நேசம்
துன்றிய உறவில், வீரம்
துள்ளிய மொழியில்; நெஞ்சம்
ஒன்றியமதத்தி லெல்லாம்
ஒரேகுல மாகி நின்றார்!


சாதியின் வரப்பைத் தாண்டி,
தனிஇன மதிலைத் தாண்டி,
மேதினி நகைக்கப் போட்ட
வெறுங்கட்சி `பந்தல்´ தாண்டி
நீதியை - மனிதப் பண்பை
நேர்மையைக் காக்க இமய
வீதியில் சென்று நின்ற