பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

50



முதுமையின் மயக்கம்; இளமையின் தயக்கம்
முற்றிலும் களைவோம்! முதலில் களைவோம்!!
பதுமையாக் கிடந்தால், பழங்கதை பேசினால்
பாவமே மீண்டும் பயிராய் விளையும்!

சந்தையில் வாங்கிய கந்தைத் துணியைச்
சதாராப் பட்டாய்ப் பாவலா செய்வோர்;
'நீதி சாஸ்திரம்' நிதமும் படிப்போர்
நீசக் கரங்களில் புழுதி துாவுவோம்!


பூட்டன் காந்தியும், பாட்டன் நேருவும்
போட்ட பாதையே புனிதப் பாதை!
தோட்டா வேண்டாம் துப்பாக்கி வேண்டாம்!!
தூய ஆத்ம துணையே போதும்!!


அழுததுபோதும்! அதிர்ந்தது போதும்!!
ஆவியும் மூச்சும் தேசமாய் ஆக்குவோம்!
கழுதைகள் மேயும் இடங்களில் நாளைக்
கல்விச்சாலைகள் தோன்றிட வேண்டும்!!

'