பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

நடந்து காெண்டே இரு!



சத்தியமாம், சாசுவதமாம் அமைதி வேண்டும்!
சகாசேர்க்கா நடுநிலைமை கூட்டு சேரா
முத்துநிகர்க் கொள்கையதே எங்கள் கொள்கை
மூள்கின்ற போர்வெறியைத் தணிப்பதற்கு
நித்தியமாம் பரிகாரம் இதுவே!' என்றே
நேரபிரான் திருநாவால் குரல் கொடுத்தார்!
பித்தமெலாம் மெதுவாகத் தெளிய, உலகின்
பேரிருட்டில் இந்தியாவே தீபம் ஆச்சு!


வல்லரசு மண்டலத்தினர் பரப்ப னைத்தும்
வானமகன் நேருபிரான் உலவி வந்தான்!
'வல்லமையே அரசி யலாம்!' என்னும் குருட்டு
வாதத்தைத் தகர்த்தெறிந்தான்! என்றும் மாறா
நல்லதொரு நிர்மாண அமைதிக் கொள்கை
நடுநலைமை ஒன்றே என முழக்க மிட்டான்!
தொல்லைமிகும் பலநாட்டுப் பூசல் தீரத்
துணிவாக நடுநிலைமை காட்டி வென்றான்!

3