பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

56



காஷ்மீர் நமதே!


பொங்கர வாவோம்! பசிப்புலி ஆவோம்!
பூமியைக் கீறும் எரிமலை ஆவோம்!
மங்கள முரசுக்ள மாற்றுக சுருதியை!
 மாணிக்க யாழும் போர்ப்பறை முழங்குக!
பங்கொடு சென்றவர் பாதை இடறி -
பாழ்மன்ப பெயரின் கைப்பா வையாய்
இங்குறு அறத்தின் எழுச்சியைக் கொய்ய
எல்லை மிதித்தனர்! தொல்லை கொடுத்தனர்!


தெங்குறு காயுடன் இளநீர் போலச்
சேர்ஜன நாயக சோஷ லிசத்தை
துங்க முறவே தொட்டி லிட்டே
சுதந்தரச் சுடரைப் போற்றிடும் நம்மேல் -
சங்கிலித் தொடர்போல் சதியும், கேடும்
தம்கோட் பாடாய் கொண்டலை சழக்கர்:
கங்குவின் கருத்தினர் பழிகொளப் பாய்ந்தே
கவ்வினர் மண்ணை! காறிய துலகம்!