பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

நடந்து காெண்டே இரு!



சூடேறும் அரசியலின் கொந்தளிப்பில்
தோன்றுகின்ற தலைமையெலாம் தலைமை ஆமா ?
நாடோறும் தனிநாமம் பஜனை செய்ய
நாலைந்து 'கைத்தடிகள்'; காகங்களையே
வீடேற்றி வைத்தபடி, வணிகம் செய்யும்
வியாபாரத் தலைமையெலாம் தலைமை ஆமா ?
மாடாகத் தலையாட்டத் தனித லையை
வல்லான்கை தருவதுமே தலைமை ஆமோ !


புதன்கிழமை வாய்கிழியச் சொன்ன வற்றைப்
'புளுகு இது' எனமறுத்து 'வெள்ளிக் கிழமை’
பதறாமல் அறிக்கைவிடும் 'வித்தை' எல்லாம்
பண்புள்ள, கற்புள்ள தலைமை ஆமா ?
உதவவரும் கைகளையே தன்த லையை
உருட்டவரும் கத்திதயதாய் கருதி அஞ்சி
கதவடைத்துச் செவிபொத்தி ஜனநாயகத்தின்
கால்நொண்டி ஆக்குவதும் தலைமை ஆமா ?