பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

66




அறிவாளும், அனுபவத்தின் முதிர்ச்சி; தேர்ச்சி;
ஆளுகின்ற நுட்பமொடு துணிவு; நேர்மை;
குறைநிறைகள் கண்டறியும் நுண்மக் கண்கள்;
கொடும்புயலும் அசைக்காத மலையாய் நின்றே
உறைபனியாய், பேய்மழையாய் நெருப்ப ணைக்கும்
உரநெஞ்சின் உத்தியுடன் வரும்பகைக்கே
அறைமுரசாய் எதிர்நிற்கும் சிங்கக் குரல்கள்
அத்தனையும் ஒன்றுவதே தலைமை ஆகும்!


காசெத்தனை கோடியதும் முன்னே கொட்டிக்
காந்தமெலாம் செய்தாலும் அசைந்தி டாமல்
மாசத்த னையும் துடைத்ததொரு ஜனநாயகத்தின்
மாணிக்கச் சூரியனாய்ச் சமுதாயத்தைத்
தேசலவ வைப்பதுவே தலைமை ஆகும்!
சீர்த்திமிகு தார்மீக உணர்வு ஒன்றே
தேசத்தின் உயிர்மூச்சாய் ஒடச் செய்யும்
செழும்ஞானப் பொக்கிஷமே தலைமை ஆகும்!