பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

நடந்து காெண்டே இரு!




துள்ளி எழு!


என்னருமைச் சோதரனே! இந்நாட்டு மன்ன வனே!

உன்னிரண்டு செவிகளிலே ஒன்றேனும் இன்றைக்குச்

சற்றே செயல் படட்டும்! சாகசத்தை செய்திட்டும்!

கற்றவனோ மற்றவனோ, காலத்தின் விழிப்பறிந்து
 
இன்னும் நீ உன் திறனை ஏனோ உணரவில்லை!

'தின்னும் தவிட்டுக்குத் தினம் உழைக்கும் பிராணி"யெனச்

செக்கடியின் பாதையிலே சிந்தை மரமரத்துக்
 
குக்கலுக்கும் கேவலமாய்க் கோணல் வலம் வருகின்றாய்!
 
முத்துமணித் தவிசேறி 'மோக்ளா' க்கள் காட்டுகின்ற

பெத்த பெரும் ஆட்கள், பிரபுக்கள் எல்லோரும்

எலக் ஷன் பண்டிகையில் இனாமாக உன்னிடத்தே

கலெக் ஷன் செய்தெடுத்த கெளரவப் பிச்சையது

தந்ததொரு வாழ்வாலே தர்பார் நடத்துகின்றார்!