பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

நடந்து காெண்டே இரு!




பூஞ்சோலை!


டெலிவிஷனுக் காவென பேரைப்பெற்ற
சினிமாதான் மூத்தகலை! இலக்கி யத்தின்
ஒலித்தொகையும், ஒளித்தோகையும் ஒன்று கூடி
உருவாகும் அற்புதமே திரைக்க லையாம்!
மலிவான - எளிதான பொழுது போக்காய்
மக்களுக்கே இருப்பதின்று சினிமா ஒன்றே!
பொலிவூட்டி வலுவூட்டிச் சமுதா யத்தைப்
பூக்கவைக்கும் பெரும்பொறுப்பும் அதற்கே உண்டு!


மாறிவரும் லெளகீகத் தட்ப வெப்பம்;
'மனித' த்தின் நெடுமூச்சு ஆசாபாசம்;
மீறிவரும் உள்ளுணர்வின் பரிணா மங்கள்
மிஞ்சிவரும் விஞ்ஞான வெற்றி - தோல்வி
ஊறிவரும் சமதர்மப் பொன்யு கத்தின்
ஓவியத்துப் பின்னணிகள் - இவைகள் யாவும்
ஊறிவரும் கருத்துள்ள கதையாய் ஒன்றை
இங்குள்ளோர் எடுத்தாரா ? - வெட்கக்கோடு!