பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வேண்டியதில்லை யென்று! திராவிட இயக்கம் முழுநேரத் தொண்டர்களையோ, தலைவர்களையோ கொண்டதல்ல! ஏதோ பொழுது போக்கும், நேரத்திலே சிலர் உழைப் பதும், பேசுவதும்தான் அந்த இயக்கத்திற்கு உயிர், உணர்வு, உற்சாகம். எனவே அது தொடர்ந்து வளர்ந்து நீடித்திருப்பது நிச்சயமல்ல. ஏன் நீடிக்காது என்பதாக வும் தாமே எண்ணிக் கணக்கிட்டு, தீர்மானித்தும் விட்ட காரணத்தால்தான் காமராஜர் இவ்விதம் கூறியிருக்கிறார் போலும்! அவரது சமீப சுற்றுப்பயணப் பேச்சுகளின் கருத்து இவ்விதமாகத்தானே அமைந்திருக்கிறது? திராவிடர் இயக்கம், குறிப்பிட்டுக் கூறவேண்டு மானால், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த நாட் டிலே வேரூன்றி, வளர்ந்து வருவதைக் கண்டு காங்கிரஸ் காரர்கள் உண்மையிலே ஏதோ ஒருவகையான அச்சம் பயம் தமக்குத் தாமே அடைந்திருக்கிறார்கள். அந்த இயக்கத்தைக் கண்டு, கண்டு, அதன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டு, கவலைப்படுகிறார்கள். அதுவும் காங் கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜர் போன்றவர்கள் கவ னத்தைக் கவர்ந்து, அவரும் 'கவலைப் படேல்' என்று வெளிப்படையாக அபயம் அளிக்கும் அளவுக்குக் கவலைப்பட்டனர். கவலைப்படுகின்றனர். என்பது நமக்குக் காமராஜரது பேச்சிலிருந்து தெரியவருகிறது என் தானே கூறவேண்டியிருக்கிறது! று- ஆம் காங்கிரஸ்காரர்கள், இந்த நாட்டின் ஆட்சிக் கும், ஆட்சிப் பீடத்திலே யமர்ந்து பாத்தியதை கொண் டாடி நாட்டை ஆளுவதற்குத் தாங்கள்தான் ஏகபோக உரிமை பெற்றவர்கள் என்று பறைசாற்றி வருகிறார்கள். தங்களுக்குக் குறுக்கே, தங்களுக்கு எதிராக எந்த வித சக்தியும் வரக்கூடாது, இருக்கக்கூடாது ; வரவிட