பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 "கவலைப்படாதீர்!" என்று கையமர்த்தி கவலைக்குக் கண்ட மருந்தாகத் தமது கிண்டலையும் கேலியையும் அள்ளிக் கொட்டியிருக்கிறார், தமது பேச்சில் ! பொழுதுபோக்கும் தலைவர்களையும், அவர்களால் வளர்க்கப்படும் இயக்கத்தையும் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று வாய்வீரம் பேசும் காமராஜரும் அவரை சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியும், கட்சித் தோழர் களும், கட்சியினரால் நடத்தப்படும் அரசாங்கத்தினரும் எந்த அளவுக்கு எம்மைப் பற்றிக் 'கவலைப்படாமல் இருந்திருக்கின்றனர்-இருப்பர் என்பதை ஆர அமர யோசித்துப் பார்க்கவேண்டுகிறேன், காமராஜரை மட்டு மல்ல, மக்கள் அனைவரையுமே! எந்த விஷயத்திலே கவலைப்படாமல் இருந்திருக் கின்றனர்! " திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ் வொரு அசைவிலும் அரசாங்கத்தின் தலையீடு இல் லையா? இயக்கச் சார்புள்ள, இயக்கத்தின் இலட்சிய வாடை வீசிடும் சிறுசிறு பிரசுரங்கள், ஏடுகள் மீதும் வில்லையா, ஆளவந்தார்கள்? தடை பாய இயக்கக் கொள்கை மணம் வீசும் புத்தகங்கள் செய்யப்பட்டனவே, பறிமுதல் செய்யப்பட் டனவே? ஏன்? ஏன் ! ' கவலைப்படவேண்டாம்,' என்ற காமராஜரின் கருத்துப்படி சும்மா இருக்கவில்லை, இந்த அரசாங்கம்! எத்தனை நாடகங்கள், நிறுத்தப்பட்டன, நாட்டில் நடிக்கக்கூடாது என்ற ஆட்சியினரின் அடக்கு முறைத் தடைச் சட்டத்தின் பிரயோகத்தினால்? எத்தனை கூட்டங்கள், இயக்கப் பொதுக் கூட்டங்கள் ஊர்வலங்கள் தடுக்கப் தடுக்கப் பட்டிருக்கின்றன போலீஸ்