பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 எங்களுக்கு எதிராக, பழமைப் பிரசாரம் பலமாக இப்போது நடைபெற்றுவருகிறது, நாடெங்கும் ! எதிர்ப்பு, ஏளனம், ஏசல், பூசல், தூற்றுதல், பாணங்கள், கேலிமொழிகள், கிண்டல் வினாக்கள், பழமை, மதம் பக்தியும், பற்றும் கொண்டு போதை யேறிய மக்களின் கோபாவேசம் ஆகிய அத்தணையையும் அன்புமுறையில், அறிவையே ஆயுதமாகக் கொண்டு தாங்கி, எதிர் நீச்சலடித்து, எதிர்ப்பிலே வ்ளரும் இயக் கம், எங்கள் இயக்கம் ! சாதாரண மக்களிடையே நடமாடும் அறிவியக்கம்- எங்கள் இயக்கம். அறிவுதாகங் கொண்ட மக்களிடையே, அண்ணன் தம்பிக்கும், தம்பி அண்ணனுக்கும், மகன் தந்தைக்கும், தந்தைமகனுக்கும் இன்னும் யார்யார் வேண்டுமானாலும், வீடு, வெளி, கூட்டம், தோப்பு, துரவு, வயல், தொழிற் சாலை எங்கும், எப்பெழுதும் வேண்டுமானாலும் எங்கள் கல்லூரி நடைபெறும்-நடைபெறுகிறது என்பதை உணரவேண்டும். நல்லறிவு பரப்பிடும் இந்த இயக்கத்தை-நடமாடுங் கல்லூரியை இடித்துவிட, முடிவிட, பழமை விரும்பிகள் - சுயநலமிகள் - ஆதிக்ககாரர்கள்.-சுரண்டி வாழ்வோர் பலப்பலவிதங்களிலே முயன்று வருகின்ற னர். எத்தகைய முயற்சிக்கும் முறிந்து போகக்கூடிய தல்ல, இந்த நடமாடுங் கல்லூரி 1 நல்லறிவும் - நல்லெண்ணமுங்கொண்ட மனித மனம் படைத்த பொதுநலத்தொண்டர்கள் மட்டுமல்ல,