பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 இல்லை! உனக்கு உடம்பிலே அணுவளவும் நாண மில்லை! இருந்திருந்தால் நீ வடவர் அனுப்பும் பண்டங் களுக்குரிய சந்தையாய் இருப்பாயா? உனக்குத் தேகத் தில் கொஞ்சமேனும் தன்மானமில்லை ! இருந்திருந்தால் நீ வடர் வாயசைப்புக்கு அஞ்சிநடுங்கும் கோழைத் திரா விடனாக இருப்பாயா? உனக்கு உள்ளத்திலே சிறிதள வும் வீரமில்லையா! இருந்திருந்தால் நீ வடவர் இடும் கட்டளையைச் சிரமேற் கொண்டு பணியாற்றுவாயா? தரணியெங்கும் தன்மானத்தில் தலைசிறந்து, வீரத் தின் உறைவிடமாய் நாணத்தின் நிறைவிடமாய் வழிவழி அரசாண்டு காலத்தின் கொடுமையால் மளமளவென மாண்டு திராவிடத்தின் பொன்னிற மண்ணிலே புதை யுண்டு போன உன் பரம்பரையின் வீரத்தை நீ விலைக்கு விற்றுவிட்டாய்! பணத்திற்கும், பதவிக்கும் நாணத்தை இறையாக்கிவிட்டாய் ! அதற்காகத் தன்மானத்தைத் தடி கொண்டுத் தாக்கிவிட்டாய் ! உன்னால் உன்னைப் பெற் றெடுத்த திராவிடம் அடைந்த இலாபமென்ன? உன்னால் உன்னை ஈன்றெடுத்தத் திராவிடம் பெற்ற சிறப்பென்ன? உன்னால் உன்னைத் தாலாட்டி, சீராட்டி வளர்த்த திரா விடம் அடைந்த புகழ் என்ன ? நாக்கைத் தொங்க விட்டுக் காத்திருக்கும் நாய் களுக்கு வீசும் எலும்புத் துண்டுகளைப் போல, உனக்கு வடநாட்டான் வீசும் சிறு பதவிகளுக்காக உன் தன் மானத்தை, வீரத்தை, நாணத்தை இழந்துவிட்டாய்— குழி தோண்டிப்புதைத்து விட்டதுமல்லாமல் உன் குருதி யிலே பிறந்த மற்றொரு திராவிடன், "இந்தச் சகிக்க முடியாதக் காட்சி ! பார்க்கச் சகிக்க முடியவில்லை இந்த வேம்பான காட்சி ! வீரத்தில் குவலயம் புகழ் பெற்ற நாடு உன் தாய் நாடு, வீரமென்பதையறியா வட நாட் டானின் ஆட்சியிலே- ஆளத்தகுதியில்லா ஆணவக்காரர் களின் அடக்குமுறை ஆட்சியிலே-அடிமைப்பட்டு அடி