44 சிங்காவினால் துரத்தப்படுகிறான் ! வட நாட்டான் தாய் நாட்டை விட்டு இலங்கையிலே அவதிப்படும் திராவிட னின் தாயகத்திலே இன்பவாழ்வு வாழ்கிறான் ! ஏன் ? தாய் நாட்டை மறந்து, ஈன்றெடுத்த தாயகத்தைத் துறந்து, இலங்கை. பூமியிலே பொன் விளைச்சலை ஏற் படுத்துகிறான். திராவிடன். அங்கேயும் இடமில்லை ; திராவிடத்திலேயும் இடம் இல்லை ! அனாதை அவன் ! அய்யோ! திராவிடனே! உன் நிலை இப்படியா சீர் கேட்டைய வேண்டும்? தாய் நாட்டையே பெறாத யூதனா நீ? அவன் வழிப் பிறந்தவனா நீ? உன்னை பெற் றெடுத்த தாயகம் இருக்கும்போது மலேயா ஏகாதிபத்தி யத்ததின் இரத்த வெறிக்கும் பலியாவதும், இலங்கை யிலே அவதிப்படுவதும் ஏன் ? நீ நினைத்தும் பார்த்த துண்டா? சிந்தித்துப் பார்த்ததுண்டா? இலங்கை யர்களுக்கு அடிமை போலக் கிடக்கிறாய்-துரத்தவும் படுகிறாய்! மலேயாவில் உழைப்பைக் கொடுக்கிறாய் உதைபட்டுச் சாகிறாய்! உன் தாயகத்திலே இரத்தம் சிந்துகிறாய் - அன்னியர்களின் ஆதிக்கத்தினால் அவதிப் பட்டு நடைப் பாதைகளைத் தேடிப்பார்க்கிறாய்! உன் நிலை ஏன் இப்படி மாறிவிட்டது? உன் நிலை ஏன் உன் சான்றோர்களின் வாழ்க்கைச் சிறப்புக்கு மாறுபட்டுச் சிதையுண்டு போகிறது? கருத்திலே நாட்டங்கொண்டு சித்தித்துப்பார்; ஆர அமரச் சிந்தித்துப்பார் ! உன் சிந்தனையில், உன் கருத்தில் பூப்பதுதான் உரிமை வேட்கை-உண்மையான உரிமை வேட்கை - அதை - அடைய வழி காட்டுவதுதான் அண்ணா காட்டும் அறப்போர் !
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/44
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை