பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 நீ தயங்கினால் உன் நாடு சீர் கேட்டையும்-படு குழியில் புதைக்கப்படும்! நீ அஞ்சினால் உன் தாயகம் அழிந்துவிடும்—அடியோடு வெட்டி வீழ்த்தப்படும் ! உன் தாய் மொழியை நீ இழப்பாய் -அதன் சிறப்பை நீ இழப்பாய் ! நீ ஒரு அடிமை-அன்னிய னுக்கு அடிமை ! அந்த அடிமை, விலங்கை உடைக்க உனக்கு வழி காட்டுவதுதான்-உன்னை தேற்றுவது தான் - அண்ணா காட்டும் அறப்போர் ! குருதி ஆற்றிலே நீந்தி விளையாடிய வீரப் பெருந் திராவிட வழித் தோன்றலிலே உதித்திட்ட வீரத்திரா விடா ! நாவசைத்து நாசத்தை வரவழைத்துக்கொண்ட வடவர்-கயவர்-மடையர்-கனக விசயர்களைத் திரா விட வேந்தனின் காலடியிலே மண்டியிட வைத்த குன் றாப் புகழ்த் திராவிட மரபிலே பிறந்திட்ட திராவிடா ! உன் முன்னோர்களின் அரியணையை நீ மறுபடியும் அடைய வேண்டுமானால், உன் பாண்டிய பரம்பரையின் சிங்காதானத்தை நீ அடைய வேண்டுமானால், திக்கெட் டும் உன் புகழ் பரவ வேண்டுமானால், டாட்டாவின், பிர்லாவீன், டால்மியாவின், பஜாஜின், செல்லாராமின், ஸூரஜ்மாலின்—வாணிகப் பிடியிலிருந்து, நீ விலகு. மறுபடியும் திராவிடத்தில் நீ வாணிகத் துறையைத் துவக்க வேண்டுமானால், நேருவின், படேலின், பிரசாத் தின், பலவந்த்சிங்கின் ஆணவ அரசுப் பிடியிலிருந்து நி அகல வேண்டுமானால், மறுபடியும் திராவிடத்திலே உன் அரசாட்சியை நிறுவ வேண்டுமானால், திராவிடப் பெருங்கடல்களில் 'ஜல உஷா', 'ஜலஜவஹர்', 'டெல்லி போன்ற கப்பல்களின் போக்குவரத்தை நிறுத்தி மறு 4 ற