பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 உன் திராவிட தலைவர்கள் திராவிடம் ஓர் தனி நாடு என்பதற்கு ஆதாரம் பல காட்டியிருக்கிறார்கள். பல பல பொதுக் கூட்டங்களில், நூல்களில். எடுத்துக்கூறு அவைகளை அந்த வீணர்களுக்கு ! நிலப்பரப்பை ஆதா ரம் கொண்டு, திராவிடநாடு, வடநாடு என்று பிரிக்கும் எல்லைக் கோட்டைப் புறக்கணித்துவிட்டு, கலாச்சாரம், மொழி, இனம், நடை உடை பாவனை, இவைகளைப் பற்றி சிந்திக்காமல்,, எல்லோரும் இந்நாட்டு மக்கள் ! எல்லோரும் இந்தியர்' என்று கூறும் உலுத்தர்களுக்கு, ஆங்கிலேயர் இந்நாட்டில் நுழையாத முன்பு திராவிட நாடும் வடநாடும் ஒரே ஆட்சியின் கீழ் ஆளப்பட்டு வந்த தென்று சரித்திர ஏட்டிலே ஆதாரங்காட்ட முடியுமா வென்று சவால் விடு-இடித்துக் கேளு ! பாலூட்டி, சீராட்டி, அணைத்து முத்தமிட்ட உன் அன்னை ஒரு வேளை அண்ணா காட்டும் அறப்போரில் நீ பங்கெடுத்துக் கொள்வதற்கு அனுப்பத் தயங்குவாள். அகநானூறு அன்னையை நீ அவளிடம் எடுத்து காட்டு ! கட்டியணைத்து களிப்புக்கொண்ட உன் தந்தை, நாட்டை அன்னியரின் பிடியிலிருந்து மீட்கப்போகும் அறப்போ ருக்கு உன்னை அனுப்பத் தடுமாறுவார். புறநானூறு தரும் அறிவுரையை அவருக்கு எடுத்துக்காட்டு ! ஈன்று புறந்தருதல் எண் தலைக்கடனே; சான்றோறாக்குதல் தந் தைக்குக் கடனே ; வேல் வடித்துக்கொடுத்தல் கொல் லற்குக் கடனே ; ஒளிறுவாள் அஞ்சம முருக்கித்தான் மடிந்து வீழ்தல் மைந்தற்குக் கடனே என்று பெற்றோர் கடமைகளையும் வகுத்துக் கூறிய புறநானூறு அன்னை யின் உரையை அவருக்கு எடுத்து விளக்கு! நீ தலை நிமிர்ந்து வாழத் திராவிடப் பெருங்குடியினர் இயற்றிய வீர இலக்கியங்களை உன் பெற்றோரின் மீது அள்ளி அள்ளி வீசு ! று