பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 உன்னை நீ தயார் செய்துக்கொள் ! உன்னை நீ திடப்படுத்திக் கொள்! உன் பரம்பரை யில் உதித்து மறைந்திட்ட வீரச் சிங்கங்களை எண்ணிப் பார் : இன்று நீ இருக்கும் கோழைத்தனமான நிலையைக் கருதிப்பார் ! வெட்கப்படுவாய் - வேதனைப் படாதே ! உன்னை அடக்கி ஆளும். ஆட்சிக்கு அண்ணா காட்டும் அறப்போரின் மூலம் எடுத்துத்காட்டு, உன் உள்ளத்தி னடத்தில் கிடந்து கொதி கொதிக்கும் உரிமை வேட் கையை ! "வீழ்ச்சியுற்ற திராவிடத்தில் எழுச்சி வேண்டும்- விசை யொடிந்தத் தேகத்தில் வன்மை வேண்டும்”-இது உன் கவிஞரின் குரல்-நம் கவிஞரின் குரல்! தெய்வீகக் கவிஞரின் குரலல்ல-புரட்சிக் கவிஞரின் குரல்! ஆஸ் தானக் கவிஞரின் குரலல்ல- ஆளப்பிறந்த மக்களுடைய கவிஞரின் குரல் ! உள்ளத்தைத் தொட்டு, ' நான் சொல் வது சரிதானே ?” என்று திராவிடனைக் கேட்கும் அழி யாக் குரல்-உன் பாரதிதாசனின் குரல் ! 6 திராவிடத்திலே பிறந்து, திராவிடத்திலே வளர்ந்து அரும்பு மீசைகளை உதடுகளின்மேல் கொண்டு, வாலிப் ஏறு நான் எனக் குவலயத்திற்கு அறிவிக்கும் திராவிட வாலிபனே ! உனக்காக அண்ணாவின் அறப்போர் காத் துக் கொண்டிருக்கிறது. அந்த அற்ப்போர்' வாய சைத்து உன்னை இருகைகளாலும் அழைக்கும்போது ஆண்மையுடன் கிளம்பு ! சிங்காரத்திராவிடம் பெற்றி ருக்கும் சண்டாளர்களை- அவர்களின் சதிச் செயல்களை - அறுக்க உன் கட்டுப்பாடு கேடயமாக-ஒழுக்கம் கூரிய. வாளாக இருக்கட்டும் ! தாயகத்திலே தோன்றி, தாயகத்திலே குழந்தைப் பேறுகளைப் பெற்றத் திராவிடனே ! உன் வருங்கால சந்