அறிவுப்படை திரளட்டும் திராவிடநாடு திராவிடருக்கே' என்ற இலட்சி யத்தை இதயகீதமாகக்கொண்டு, இன விடுதலைக்காண, இன அரசுக்காண அறப்போர்-அண்ணா காட்டும் அறப் போர் நடத்திட, நம்மை நாம் தயாரித்துக்கொண்டு வருகிறோம், மேலும் தயாராகி வரவேண்டும்! அறிவுப்படை திரளட்டும் - அறப்போர் நடத்திட முதலில் அறிவுப்படை திரளவேண்டும், திரட்டப்பட வேண்டும். நாடெங்கும். அப்போதுதான், திராவிடாாடு திராவிடர்க்காகும், ஆக்கவும் முடியும். அறப்போர் -சொந்த நாட்டைப் பிறர் பிடியினின் றும் விடுவித்திடும் போர்- விடுதலைப்போர் இன விடுதலைப்போர் திராவிட இன விடுதலைப்போர் நமது அறப்போர், அறப்போர்க்களத்திலே அணி வகுத்து நின் றிடும் அறிவுப் படையை-அறிவு ஆயுதத்தை- இன உரிமை யுணர்ச்சியை, மக்களிடையே ஊட்டி, மக்களை, திராவிட இன மக்களைத் தயார் செய்தாகவேண்டும். மக்களனைவரும் அறிவுப்படை வரிசையிலே அணி வகுத்து நின்றிடும் நிலை, மனநிலை - எண்ணத் தெளிவு பெற்றால்தான்-பெற்றிடும்படி செய்தால்தான் திராவிட நாட்டை அடைவது, அடைந்திடுவதின் முழுப்பயனை யும் காண முடியும். அன்பு, அருள், அறம், அறிவு-ஆராய்ச்சி ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்ட பொது உரிமை- பொது உடமை நாடாக, திராவிடநாடு விளங்க முடியும்,
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/56
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை