பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 அறிவு - மனிதருக்கு இல்லாமலில்லை, இருக்கத் தான் இருக்கிறது, மனிதன் மிருகங்களினின்றுமாறுபட்டு, வேறுபட்டு நன்மையெது-தீமை யெது என்று தெளிந்து - உணர்ந்திட நடந்திட இயற்கையிலேயே அறிவு பெற்றுத்தான் இருக்கின்றனர். சமயம்- சந்தர்ப்பம், சூழ்நிலை காரணமாக மனி தரில் சிலர் சிந்தனைத் தெலிவு மிக்கவர்களாகவும், சிலர் சிந்தனைத் தெளிவு குறைந்தவர்களாகவும் காணப்படுகின் றனர். இத்தகைய சமயம்--சந்தர்ப்பம் சூழ்நிலை பேதம் ஆகியவை காரணமாக சிந்திக்காமலும், சிந்தித்தாலும், தெளிவு பெற்றாலும், பெற்றிருந்தாலும் அதன்படி செய லாற்ற முடியாதவர்களாகப் பலர் செயலற்றுக் கிடப்பது மட்டுமல்ல, சிந்தனைத் தெளிவிற்கு மாறான முறையி லேயே வாழ்வை நடத்திட வேண்டிய நிலைக்கு, நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டு. நாளடைவில், சிந்திக்கும் திறனை இழந்து, தேவையல்ல என்று ஒதுக்கி -சிந்திக் கத் தெரியாதவர்களாக-சிந்திக்க மாட்டாதவர்களாக, சில பல நேரங்களில் சிந்திக்கவேகூட மறுப்பவர்களாக மாறி விடுகின்றனர் ! பழக்கம்- வழக்கம்-ஜாதி முறை சமய நெறி- சன்மார்க்க போதம், சகுனம் சாஸ்திரம் என்பன வற் றின் பேரால், எப்படிபோ மனித சமுதாயத்தில்-சமூ கத்தில் மேன்மையும், மேலான குனியாது வளையாது பிறவி ஆதிக்கம் செலுத்தியே சுகபோகிகளாக வாழ்ந் திடும் கூட்டத்தின் கட்டுப்பாடாகத் திட்டமிட்டு களது மனத்தெளிவை அறியாமை எனும் இருட்டி லேயே அமிழ்ந்து கிடக்கும்படி செய்து விட்டிருக்கின்ற னர். மக்