பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 கடவுள் - மனிதனது செயல்களைக் கண்காணித்து நல்ல தீர்ப்பு வழங்குபவர். கடவுள் - மனிதனைக் கட்டுப்படுத்த நல்லதை செய்ய வைத்திட ஓர் கருவி- என்று கூறிடுகின்றனர். மனிதன் தனது செயல்களைச் செம்மைப் படுத்தி சீரியவாழ்வு வாழ ‘கடவுள் உணர்ச்சி தேவை யென்றும் கூறப்படுகிறது. ஆனால், இன்றைய கடவுள்கள், நாட்டிலே, நாட்டு மக்களிடையே காணப்படும், காட்டப்படும் கடவுள்கள், புண்ணிய கதைகள் என்றும் புராணங்கள் என்றும் கூறப்படும் ஏடுகளிலே காணப்படும் கடவுளின் போக் கைக் காணும்போதும் படிக்கும் போதும் * கடவுள் உனர்ச்சி' இத்தகைய கடவுள் கடவுள் உணர்ச்சி' மக்களுக் குத் தேவைதானா? என்று கேட்காமலிருக்க முடிய வில்லையே ! 6 தாருகா வனத்து ரிஷி பத்தினிகளைக் கெடுக்க முனைந்த சிவனைக் கடவுள் எனக்கொள்ள வேண்டுமா ! ஆண் கடவுளான விஷ்ணு பெண் ணுருவை- மோகினி அவதாரத்தை மோகித்துப்புணர்ந்து அய்யனாரப் பணைப் பெற்றெடுத்த சிவனாரை, வாழ்விற்கு வழி காட் டியெனக் கொள்வது, நன்றா நீதியா ? முறைதானா? ஜலந்திராசுரனுடைய மனைவியை, அவனைப்போ லவே உருக்கொண்டு கெடுத்த விஷ்ணு, காமாந்தா கார்க் கடவுளாகக் கருதப்பட்டு ஒதுக்கப்பட வேண்டிய வர்தானே?