பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மக்கள்-கடவுள்-மதம் சாஸ்திரங்களின் பேரா லும், பழக்கம் வழக்கம் - சகுனம், ஜோதிடம் முதலிய குருட்டுக் கொள்கைகள்—வழியில் சென்று தங்களது மதியைப் பறி கொடுத்து. விதிவிட்ட வழி,' என்று, வாழ வழியற்றவராக இருண்டவாழ்வு-வரண்ட வாழ்க்கை வாழ்வதை மாற்றியாக அறிவுப் பிரச்சாரம் செய்து வரவேண்டும். அறிவுப் பிரச்சாரம் ஆண்டவன் முதல் சாதாரணத் தொழில் முறைவரைக்கும் மனித வாழ்வின் எல்லாத் தறைகளிலும் செய்து நாட்டிலே நல்லறிவுப் படை திரட்டியாக வேண்டும். இந்தப்பணியை, பேச்சு, எழுத்து - நாடக சினிமா முதலிய சகல சாதனங்களையும் துணையாகக் கொண்டு செய்து வருகிறது எங்கள் இயக்கம். பொது உரிமை -பொதுஉடை ம-என்ற பண்புகள் கொண்ட மனித சமுதாயத்தை உறுவாக்கிட, அறிவுப் படை திரளட்டும், நாடெங்கும்! பொது உரிமை-மனிதர் அனை வருக்கும் உரிமை மனிதராக வாழ உரிமை உண்டு என்ற நிலைமையாகும். பிறப்பால் மனிதரில் பேதமில்லை உயர்வு தாழ்வுமில்லை மனிதனாகப் பிறந்தவர் அனைவரும் சரிநிகர் சமானமாக வாழவேண்டும்-வாழ உரிமையுள்ளவர்களே என்ற அடிப்படையைக் கொண்டதே பொது உரிமை. உலகில் மனிதர் வாழ, உடைமை- பொருள் வாழ்க்கை வசதிகள்- உணவு-உடை-உறையும் இடம் ஆகியவை தேவைப்படுகிறது.