பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 பொது உரிமையுள்ள மனித இனம், உலக உடைமை களையும் பொதுவாக, அனைவரும் பகிர்ந்து அனுபவிக்க வேண்டும் என்பதே பொது உடைமையின் அடிப்படைத் தத்துவம். இந்த இருபண்புகள்-பொது உரிமை-பொது உடைமை என்ற இரு மனிதப்பண்புகளையும் திருநாட் டில் ஏற்படுத்த மக்களை நல்லறிவாளர்களாக-தன்னம் பிக்கைக்கொண்ட தமிழர்களாக-வாழ வைக்கவேண்டும். தாழ்ந்த தமிழகம்-திராவிடம் தலைநிமிர்ந்து தன், கையே தனக்குதவி, எனத் தன்னைத்தான் நம்பி, தனது உழைப்பால் உயர்ந்து அதே நேரத்தில் தனது உரிமை- உடைமை ஆகியவற்றைப் பிறர்பிடியினின்றும் மீட்டு தன் வாழ்வு-தன்னினவாழ்வு தன்மானவாழ்வு-திராவிட வாழ்வு வாழவேண்டும். திராவிட வாழ்வு-திராவிட நாட்டிலே ஏற்பட மக்கள் மனத்தெளிவு அறிவு உணர்ச்சி-ஆராய்ச்சித் திறன் பெற்றவர்களாக வாழவேண்டும்-வாழும் எண் ணம்-மனமாறுதல் விஞ்ஞான ரீதியாக ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை எங்கும் பரப் பிடும் அறிவுப்படை திரளட்டும்-திரளட்டும் ! அறிவுப் படை திரளட்டும்-திக்கெட்டும் திராவிட இன முரசு கொட்டட்டும். பொது உரிமை-பொது உடைமை பூத்துக் குலுங் கிடும் நாடாக-நாட்டவராக நம்மை நாம் தயாரித்துக் கொள்ள, நாமெல்லாம் நடமாடுங் கல்லூரிகளாகி, நாடெங்கும் அறிவுப் படை திரளப்பாடுபடுவோம்-பல னும் காண்போம் பகுத்தறிவின் துணை கொண்டு.