பரந்த மனப்பான்மை...! திராவிடநாடு திராவிடருக்கே என்ற இலட்சிய முழக்கமும் சுயமரியாதை.வாழ்வே சுகவாழ்வு! என் பேச்சும் பிரச்சாரமும் குறுகிய மனப்பான்மையாம் ! குறுகிய மனப்பான்மை கூடாது, தகாது, ஆகாது. பரந்த மனப்பான்மையோடு எதையும் பார்க்கவேண்டும், பேசவேண்டும், செய்யவேண்டும் !! எல்லோரும் இந்தி யர், எல்லோரும் இந் நாட்டு மன்னர் இதை உணரவேண் டும். மேற்கண்டபடி யெல்லாம் ஒரு சில கருத்துக்கள் நமது இலட்சியத்தைக் கேலி, கிண்டல், கேவலம் என்ற முறையிலே நாட்டில் நடமாடி வருகின்றன. குறுகிய மனப்பான்மை கூடாது, பரந்தமனப் பான்மை வேண்டும் என்று பேசிவிட்டால் மட்டுமே போதுமா? எது குறுகிய மனப்பான்மை? எது பரந்த மனப் பான்மை? மொழி, கலை நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கம் ஆகியவற்றால் ஒன்றுபட்ட இனத்தவர், தம்முடன் முற்றி லும் மாறுபட்ட வேறினத்தவருடன் வாழ மறுப்பது குறுகிய மனப்பான்மையா? வேறுபட்ட, மாறுபட்ட இனத்துடன் சேர்ந்து வாழ்வதால் தமது இனம் சீரழிவதைக் கண்டு மனம் வெதும்பி, தணித்து வாழ எண்ணிடுவதே குற்றமா? குறைமதியா? குறுகிய மனப்பான்மையா?
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/64
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை