பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

விந்தன்


“எனக்கும் அதிலே வருந்தந்தான்; என்ன செய்வது ? ‘வசந்த சேனா'வின் கதை அப்படி முடிஞ்சப்புறம் ஏ.பி.என். ‘ஆளப்பிறந்தவன்’ டைரக்சனோடு, என்னை வைச்சித் தானும் ஒரு படம் எடுக்க முடிவு செய்தார். அதுவே ‘நல்ல இடத்துச் சம்பந்தம்’. அந்தப் படத்திலே எனக்கு ஈடு கொடுத்து நடித்தவர் சவுகார் ஜானகி. அவரை என்னிக்கும் என்னாலே மறக்க முடியாது. அவருக்கும் எனக்கும் இடையே மூன்று வருஷ காலத்துக்கு மேல் கலையுலகத் தொடர்பு இருந்தது. அந்தக் காலத்திலே அவருடைய காருக்கு ஒரு காலன் பெட்ரோல் சும்மாப் போடறேன்னு நான் சொன்னாக்கூட அவர் அதை ஏத்துக்கமாட்டார். ‘நான் விரும்பறது. உங்களுடைய நடிப்புக் கலையை, ஓசிப் பெட்ரோலை இல்லே'ன்னு சொல்லிவிடுவார்.”

“படித்தவர் அல்லவா ?”

“படிச்சவங்களிலும் அப்படி எங்கேயோ ஒருத்தர்தானே இருக்காங்க?”

“ஆமாமாம், அப்புறம் ?”

“ஆளப்பிறந்தவன் வர்றதுக்கு முந்தி நல்ல இடத்துச் சம்பந்தம் வந்து நல்லா xட ஆரம்பிச்சிடிச்சி. அதுக்கு மேலே கேட்கனுமா ? ஏகப்பட்ட சான்ஸ் எனக்கு. அந்தக் கெடுபிடியிலே சொந்தப் படத்தை என்னாலே கவனிச்சி எடுக்க முடியல்லே, நிறுத்திட்டேன்...”

“கம்பெனி... ?”

“அதோடு க்ளோஸ்!”

“செலவு செய்தது... ?”

“ரெண்டரை லட்சம்!”

“பணம் கொடுத்து உதவியவர்களெல்லாம் என்ன ஆனார்கள் ?”

“திருப்பிக் கொடுத்துட்டேன்."