இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிறைச்சாலைச் சிந்தனைகள்
25
வேன் ‘வெ ய்ட்'டாச்சு. அந்த “லைட்'டை இந்த ‘வெய்ட்'டாலே கட்டி இழுக்கச் சொன்னேன். விஷயம் முடிஞ்சது. கிரேன் இல்லாமலே லாரி கிளம்பிடுது. ‘ஆஹா'ன்னான் ஒருத்தன்; ‘நல்ல மெக்கானிக்கல் பிரெய்ன்'னான் இன்னொருத்தன். ஊருக்கு வந்து சேர்ந்தோம். ஒரு நாள் காலையிலே பார்த்தா என் வீட்டு வாசல்லே பிளைமவுத் கார் வந்து நிக்குது. ‘என்ன விஷயம் ?'னா சுந்தரம் அய்யங்கார் அனுப்பினார்'னு சொன்னாக. என்கிட்டே இதுக்கு ஏது பணம் ?ன்னேன். ‘உங்களுக்கு எப்ப செளகரியமோ அப்போ கொடுக்கலாம்’னு அய்யங்கார் சொன்னதாச் சொன்னாக. ‘சரி'ன்னு ஐந்நூறும் ஆயிரமுமா கொடுத்து அந்தக் கடனை அடைச்சேன். அதிலிருந்து அய்யங்கார் மகன் துரைசாமிக்கும் எனக்கும் ஏற்பட்ட தொடர்பு அவர் மறையற வரையிலே இருந்தது. நான் ஜெயில்லே இருந்தப்போ அவர் பொண்ணு கூட வந்து என்னைப் பார்த்துட்டுப் போச்சு."