பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

விந்தன்


"சாரங்கபாணி அண்ணனும் சம்பந்தம் அண்ணனும் அப்போ எங்க கம்பெனியிலே இருந்தாங்க. காமெடியிலே அந்த நாளிலே அவங்களை மிஞ்ச என்.எஸ்.கே.யால் மட்டுமில்லே, வேறே யாராலும் முடியல்லே. அதாலே டி.கே.எஸ். கம்பெனிக்கு அவர் போனார்.”

“சரி, அப்புறம் ?” “போலீசார் என்.எஸ்.கிருஷ்ணன்மேல் திருட்டுவழக்குப் போட்டாங்க. வேறே வழியில்லாம எல்லாரும் செய்யறாப்போல என்.எஸ்.கே.யும் அய்யர் கிட்டே சமாதானம் பேச வந்தார். ‘வந்தியா வழிக்கு ?ன்னு அய்யரும் வழக்கை வாபஸ் வாங்கிக்கிட்டு அவரை மறுபடியும் தன் கம்பெனியிலே சேர்த்துக்கிட்டார்.”

“கொஞ்சம் வசதியுள்ளவர்கள் நினைத்தால் சட்டம்கூட எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும் என்பது வெள்ளைக்காரன் காலத்திலேயே இங்கு முடிவான விஷயம் போலிருக்கிறது ?”

“இங்கே மட்டும் இல்லே; உலகம் முழுதுமே அப்படித்தான். ஜனங்கவெறும் சீட்டுக் கட்டுத்தானே ? யார் எப்படி வேண்டுமானாலும் கலைத்துப் போட்டு ஆடலாம்”

“பிறகு?”.

“எங்க நட்பு எப்போதும்போல இருந்தது. ஓய்ந்த நேரத்திலே அவர் என்கிட்டே கார் ஓட்டக் கத்துக்குவார்; மெக்கானிசம் கத்துக்குவார். எலெக்ட்ரிஷன் வேலையையும் அவர் விடறதில்ல, அதையும் கத்துக்குவார். அந்தச் சமயத்திலேதான் அவர் என்கிட்டே ஒரு சபதம் போட்டார்...”

“அது என்ன சபதம் ?”

“அப்போ கன்னையா கம்பெனியிலே இருந்த கிட்டப்பா, தாமிரபரணி ஆத்துக்குக் குளிக்க வரப்போல்லாம் கார் எடுத்துக்கிட்டு வருவார்; நானும் கார் எடுத்துக்கிட்டு