பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

விந்தன்


"பிறந்தது மதுரை என்றாலும் சிலோனில் வளர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் கீதா. பி.ஏ. வரை படிச்சவ. பி.எல். படிக்கச் சென்னை வந்தப்போ நானும் அவளும் சந்திச்சோம்; ஒருவரையொருவர் விரும்பிப் பதிவுத் திருமணம் செஞ்சிக்கிட்டோம்...”.

“ஏற்கெனவே உங்கள் வாழ்க்கையில் பங்கு கொண்டுள்ள தனம் அதற்குச் சம்மதித்திருக்க வேண்டுமே ?”

“அந்த விஷயத்திலே அவ அந்த நாள் நளாயினி மாதிரி; ‘உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம்’னு சொல்லிட்டா... நானும் கீதாவும் ஒரு சமயம் சிதம்பரத்திலே நடந்த திராவிடக் கழக மாநாட்டுக்குப் போயிருந்தப்போ, டிராவலர்ஸ் பங்களாவில் தங்கியிருந்தோம். ஒரு நாள் சாயந்திரம், ‘நான் கோயிலுக்குப் போய் நடராஜரைத் தரிசனம் செஞ்சிட்டு வரேன்'னா கீதா...”

‘பெரியார் கொள்கைக்கு....”

“அவருடைய கொள்கைப்படி பார்த்தா, ‘எனக்கு வேண்டியது அறிவாளிங்க இல்லே, முட்டாளுங்க தான்னு அவரே சொல்வாரு என்னைப் பொறுத்தவரையிலே, அதை நான் ஏத்துக்கிட்டிருக்கேன். எனக்காக என் வீட்டிலே உள்ளவங்களும் அதை ஏத்துக்கணுங்கிறது என்ன நியாயம் ?.. அது எனக்குப் பிடிக்கிறதுமில்லே, அவங்க அப்படி இருக்கணும்னு நான் எதிர்ப்பார்க்கிறதுமில்லே. அதாலே ‘போயிட்டு வா'ன்னு கீதாவை அனுப்பி வைச்சிட்டு, அவளுக்குத் தெரியாம அது வரையிலே மறைச்சி வைச்சிருந்த விஸ்கி பாட்டிலை எடுத்துத் திறந்து, கொஞ்சம் கொஞ்சமா சோடாவிலே கலந்து குடிச்சிக்கிட்டிருந்தேன். ‘ஆஷ் ட்ரே'யிலே புகைஞ்சிக்கிட்டிருந்த சிகரெட்டை எடுத்து ஓர் இழுப்பு இழுத்தேன். நல்ல கிக் அந்தக் கிக்கிலே சிகரெட் சாம்பலை ட்ரேயிலே தட்டி விடறதுக்குப் பதிலா விஸ்கி பாட்டில்லே தடடிவிட்டுக்கிட்டிருந்திருக்கேன் போலிருக்குது அந்தச் சமயம் பார்த்து கோயில்லேருந்து வந்த கீதா அதை