பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

33


5. காந்தியார் மேல் வந்த கோபம்

ங்க கம்பெனி அப்போ மாயவரத்திலே முகாம் போட்டிருந்தது. காந்தியார் வந்தார்....

“அப்போது நீங்களும் காங்கிரஸ்காரரா யிருந்தீர்களா ?”

“இல்லே, ஆனா அதுக்காக எனக்குத் தேசபக்தி இல்லேன்னு நெனைச்சுடாதீங்க... வெள்ளைக்காரன்கிட்டேயிருந்து இந்தியா விடுதலையடையறகுக்கு அப்போ காந்தி காட்டிய வழியைவிட பகத் சிங் காட்டிய வழிதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதாலே அவர் கோஷ்டியிலே நான் இருந்தேன். அண்ணன் சாரங்கபாணி மட்டும் அன்னிக்கும் காந்தி பக்தர்தான்; இன்னிக்கும் பக்தர் தான். அவரும் நானும் காந்தியாரைப் பார்த்துட்டு வரலாம்னு கொட்டாங்கச்சிச் செட்டியார் வீட்டுக்குப் போனோம்...”

“யார் அந்தக் கொட்டாங்கச்சிச் செட்டியார் ?”

“அந்த நாள் மாயவரம் பெரிய மனுஷனுங்களிலே அவரும் ஒருத்தர். அவர் வீட்டிலேதான் காந்தி தங்க ஏற்பாடு சேஞ்சிருந்தாங்க. அங்கே நாங்க போறப்போ ஒரே கலாட்டா...!

“ஏன்?”

“தியாகி வள்ளியம்மை பிறந்த தில்லையாடியைப் பார்த்துட்டுப் போகக் காந்தியார் வந்திருந்ததுதான் அதுக்குக் காரணம்..."