பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

35


காலத்திலே ஆயிரம் பேரு, பத்தாயிரம் பேருன்னு சேர மாட்டாங்க; அம்பது பேரு சேர்ந்தா அதுவே ஜாஸ்தி. காந்தியார் பேசினார். அவர் பேசியதை டி.எஸ்.எஸ்.ராஜனோ, யாரோ ஞாபகமில்லே, தமிழிலே மொழி பெயர்த்துச் சொன்னாங்க. அன்னியத் துணி பகிஷ்காரத்தைப் பத்தி அவர் பேசினப்போ, அங்கே இருந்த அத்தனை பேரும் உணர்ச்சி வசப்பட்டோம். கட்டியிருந்த துணியை அங்கேயே அவுத்துப் போட்டுத் தீ வைச்சிக் கொளுத்திட்டோம். கூட்டம் முடிஞ்சது; அப்பத்தான் நான் வெறும் கோவணத்தோடு நிற்கிறது எனக்குத் தெரிஞ்சது.”

“பழனியாண்டவர் வேண்டுமானால் அப்படி நிற்கலாம்; நீங்கள் நிற்கலாமா ?”

“நான் சாரங்கபாணி அண்ணனைத் தேடினேன், அவர் எப்படி இருக்கார்னு பார்க்க...ஆளைக் காணோம். அந்தக் கோலத்துடனேயே நாடகக் கொட்டகைக்குப் போனேன். அங்கே புதிய கதர்த்துணி வாங்கிக் கட்டிக்கிட்டு அவர் ஜம்முன்னு உட்கார்ந்துக்கிட்டிருந்தாரு. அந்த வசதி அப்பவே அவருக்கு இருந்தது; எனக்கு இல்லே..என்ன செய்வேன்? அய்யர்கிட்டே வேறே துணி வாங்கிக் கட்டிக்கிறதும் அவ்வளவு சுலபமில்லே. அதை நெனைக்க நெனைக்க எனக்குக் காந்தி மேலேயும் கோபம் வந்தது; அண்ணன் சாரங்கபாணி மேலேயும் கோபம் வந்தது. அதைத் தீத்துக்க ஒரு வழி கண்டுபிடிச்சேன்...”

“அது என்ன வழி ?”

“சும்மாவாச்சும் ‘ஓ’ ன்னு அழுதுக்கிட்டே சாரங்கபாணி அண்ணன்கிட்டே போய், “அண்ணேண்ணே, காந்தி செத்துப் போயிட்டார், அண்ணே அவரை யாரோ அடிச்சிக் கொன்னுட்டாங்களாம், அண்ணே ; ன்னேன்,...அவ்வளவு தான்; எப்போடா, எங்கேடா? ன்னு பதறிக்கிட்டே அவர் நிஜமாவே கேவிக் கேவி அழ ஆரம்பிச்சிட்டாரு, ‘அழறியா, நல்லா அழு ‘ன்னு நான் உள்ளுற நெனைக்சிக்கிட்டே தில்லையாடியைப் பார்க்கப்போற வழியிலே அவரை யாரோ